Information Technology

ஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.!

இந்த ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதல் போக்குவரத்துக்காக கேப்சூலுலை அமெரிக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நாம் குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்ல முடியும். இதன் மூலம் விமானத்தை மிஞ்ச கூடிய வகையில் இந்த திட்டம் வர இருக்கின்றது. 


இந்த முறையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் போக்குவரத்து நடத்த முடியும் எனக் கூறப்படுகின்றது. ஹைப்பர்லூப் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற் கூட்டத்தில் இதற்கான கேப்சூலை தயாரித்துள்ளது. 

ஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.!



இந்த கேப்சூல் 32 மீட்டர் நீளமுள்ள இந்த கேப்சூல் பிராசில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 



ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர, இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரயில், விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பமே ஹைப்பர் லூப். 


கேப்சூல் போன்ற குறைந்த காற்று அழுத்தம் கொண்ட ஸ்டீல் குழாயில் காந்த விசையைப் பயன்படுத்தி ரயில் போன்று இயக்கப்படும். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை தொடங்கிய எலான் மஸ்க் என்பவர் தான் இந்த திட்டத்தை முதன் முதலில் முன்மொழிந்தவர். எலான் மஸ்க் நிறுவனம் மட்டுமின்றி, விர்ஜின் ஹைப்பர்லூப், கனடாவை சேர்ந்த டிரான்ஸ்பாட் போன்ற நிறுவனங்களும் இந்த திட்டத்திற்காக அதிக பணத்தை முதலீடு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. 


விமான கட்டணத்தை விட குறைந்த செலவில், விமானத்தை விட அதிக வேகத்தில் ஹைப்பர்லூப்பில் பயணிக்க முடியும் என்பதுடன், சமூக பொருளதார முன்னேற்றத்திற்கும் இந்த போக்குவரத்து உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


Related posts

கொரோனா வைரஸ் வடிவத்தில் பெரிய சைஸ் ஆலங்கட்டி மழை!!

TechNews Tamil

இனி அன்லிமிடெட் எஸ்எம்எஸ்கள்— டிராய் அதிரடி!!

TechNews Tamil

ரூ. 97, ரூ. 365 திட்டங்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.!!

TechNews Tamil