Information Technology

நூற்றுக்கணக்கில் இலவச மூவிக்கள்…. புதிய திட்டத்துடன் கூகுள் ப்ளே மூவிஸ்

கொரோனா பரவுதல் தீவிரமானதன் காரணமாக, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் வீட்டிலேயே தங்கி வெளியே செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.

அவர்களுக்கு பொழுதுபோக்கு சேவைகளை வழங்க கூகுள் ப்ளே மூவிஸ் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

நூற்றுக்கணக்கில் இலவச மூவிக்கள்…. புதிய திட்டத்துடன் கூகுள் ப்ளே மூவிஸ்

அதாவது கூகுள் பிளே மூவிஸ் அதன் பயனர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இலவச படங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படங்களுக்கு இடையே ஸ்கிப் பண்ண முடியாத விளம்பரங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மற்ற மொழிப் படங்களுக்கு சப்-டைட்டில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவை கூகுள் பிளே மூவிஸ் பயனர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகின்றது. இதனால் பயனர்கள் இந்தத் திட்டத்தினை வரவேற்றதோடு, புதிய பயனர்களும் இதில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வியட்நாமில் இலவச அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரம்.!

TechNews Tamil

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். வழங்கும் சேவை!!

TechNews Tamil

229 ரூபாயில் ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்த வோடபோன்!!!

TechNews Tamil