Mobile

சீனாவில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்!

ஹூவாய் நிறுவனம் சீனாவில் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி  எடிஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யு பிராசஸர் மற்றும் 8ஜி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்!

நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் சில்வர் மூன் ஸ்டார், கிஜிஜ்ங் ஃபார்ஸ்ட் (க்ரீன்), மிட்நைட் பிளாக் மற்றும் மிட்சம்மர் பர்பிள் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ்,  2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இது 40 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதாக உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான EMUI 10.1 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் 5ஜி மற்றும் 4ஜி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் ஆதரவு உள்ளது.

Related posts

விறுவிறுவென விற்றுத் தீர்ந்து வரும் ஓப்போ A12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 1000 விலைக்குறைப்புடன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

1000 தள்ளுபடி அறிவித்த Oppo A9 2020!

TechNews Tamil