மிட்ரேன்ஜ் பட்ஜெட் விலையிலான Huawei Y9 Prime 2019 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் மிகப்பெரிய சிறப்பம்சங்களாக Pop-up Selfie கேமரா, Notch-less டிஸ்பிளே மற்றும் 4,000mAh பேட்டரி ஆகியவைகள் திகழும் என்பது மட்டும் வெளிபடுத்தப்பட்டு இருந்தது.
இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie அடிப்படையிலான EMUI 9.0 கொண்டு இயங்குகிறது. 19.5: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் கொண்ட 6.59 அங்குல முழு எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை,
Huawei Y9 Prime 2019 அதன்
பின்புறத்தில் ஒரு மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட்-ஆங்கிள்
லென்ஸ் கொண்ட இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை கேமரா அடக்கம்.
முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பீ கேமராவை உள்ளது.
மெமரி வேரியண்ட்களை
பொறுத்தவரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகிய இரண்டு உள்ளடக்க சேமிப்பு மாதிரிகளின் கீழ் வாங்க
கிடைக்கும். பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஜிபிஎஸ், யூஎஸ்பி-டைப் சி மற்றும் 4 ஜி எல்டிஇ போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.
ப்ளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.