ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
- ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ மாடலின் விலை – இந்திய விலை ரூ.18,860
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது சிறப்பான வகையிலான சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் மேம்பட்ட வசதிகள் கொண்டுள்ளது.
இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ வாட்ச் ஆனது ஆக்சிஜன் சாட்யூரேஷன் மானிட்டரிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இது துடிப்பு சென்சார், பிரெஷர் லெவல் மானிட்டரிங் மற்றும் உறக்கத்தை கண்காணிக்கும் அம்சம், உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி போன்றவற்றையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த வாட்ச் ஆனது 1.39 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளே உடனான 454×454 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இந்த வாட்ச் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9.0 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் வசதி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் 5.1 வசதி, ஜிபிஎஸ் வசதி, ப்ளூடூத் வசதி போன்றவற்றினையும், மெமரி அளவாக 4ஜிபி மெமரி கொண்டுள்ளது.