ஹூவாய் நிறுவனத்தின் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் ஆகும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்த ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 26 ஆம் தேதி அறிமுகம் ஆகலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பி40 ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் வளைந்த OLED ஸ்கிரீனைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரின் 990 பிராசஸர் கொண்டதாக உள்ளது, இது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த EMUI 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மேலும் இது 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 52 எம்.பி. பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்பீக்கர் கிரில் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது AMOLED ஸ்கிரீனைக் கொண்டுள்ளது மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.