மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் அதன் ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 60Hz refresh rate, 2340 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.
கேமரா எனக் கொண்டால் இது பின்புறத்தில் 50எம்பி அல்ட்ரா விஷன் கேமரா, 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 8எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் முன்புறத்தில் 32எம்பி கேமரா, கொண்டுள்ளது.

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும் இது கிரிண் 990 4ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது. பேட்டரி அளவு எனக் கொண்டால் 3800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W Huawei சூப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு எனக் கொண்டால் புளூடூத் 5.1, வைஃபை 802.11, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.