ஹூவே நிறுவனம் நோவா 7ஐ என்ற ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் உலக சந்தைக்கு கொண்டு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின.
இந்த ஹூவே நோவா 7ஐ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். மிக அதிவேகம் என்று கருதும் வகையில் 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கினை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டதாக உள்ளது.
இந்த ஹூவே நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இரட்டை டூயல் நானோ சிம் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இந்த நானோ 7ஐ ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்.டி. டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டா கோர் ஹிசிலிகான் கிரின் 810 எஸ்.ஓ.சி. வசதி கொண்டதாக உள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் 256 ஜி.பி. வரையிலான உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைட் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் இரு 2 மெகா பிக்சல் கேமராக்கள் உள்ளன.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802, 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் வி5.0 , 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், டைப் சி சார்ஜிங்போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 4,200 ஆம்ப் பேட்டரி திறன் கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.