ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, Kirin 710 கொண்டு இயங்கிய ஹீவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக Nova 5i Pro களமிறங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பிரதான அம்சமாக அதன் Punch-Hole Display மற்றும் Quad Camera (நான்கு கேமரா) அமைப்பை குறிப்பிடலாம்.
சரியாக 178 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது முன்பக்கத்தில் கண்ணாடி பேனல்கள் மற்றும் பின்பக்கத்தில் உலோக ப்ரேமினால் ஆன வடிவமைப்பை கொண்டுள்ளது.

Punch-Hole வடிவமைப்பின் கீழ், 19.5: 9 எனும் திரை விகிதம் மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் அளவிலான ரெசல்யூஷன் கொண்ட 6.26 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளேவை வழங்குகிறது.
Huawei Nova 5i Pro ஆனது மிட்நைட் பிளாக், அரோரா மற்றும் எமரால்டு கிரீன் போன்ற மூன்று வண்ண மாதிரிகளின் கீழ் கிடைக்கும். இதன் 6 GB + 128 GB மாடலானது ரூ.22,000/-க்கும், 8GB + 128 GB மாடலானது ரூ.25,000/-க்கும் மற்றும் 8 GB + 256 GB மாடலானது ரூ.28,000/-க்கும் என்கிற புள்ளியை எட்டலாம். ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று Huawei Nova 5i Pro Flash Sale நடைபெறவுள்ளது என்பதை குறிப்பெடுத்துக்கொள்ளவும்.