சீன நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் நிறுவனத்தின் மைமாங் 9 ஸ்மார்ட்போனை ஜூலை 27 ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹூவாய் மைமாங் 9 ஸ்மார்ட்போன் 6.8 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.0GHz ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 (MT6873) 7nm செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வகைகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி சேமிப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சாரினையும், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு EMIUI 10.1 உடன் இயங்குவதாகவும் உள்ளது மேலும் 4300mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.