ஹூவாய் நிறுவனம் மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட்டினை 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இது மிகச் சிறப்பான அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், இந்த டேப்லெட் தற்போது ஸ்பேஸ் கிரே நிறத்தில் வெளியாகி உள்ளது.
1. ஹூவாய் மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 22,990
இந்த டேப்லெட் ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த டேப்லெட் 10.1 இன்ச் 1920×1200 ஃபுல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஹைசிலிகான் கிரின் 659 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

ARM மாலி-T830 MP2 GPU வசதி கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் EMUI 8.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது, கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது.
இது முன்புறத்தில் 8 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. கூடுதலாக இது 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹார்மன் கார்டன் குவாட் ஸ்பீக்கர்கள், ஹூவாய் ஹிஸ்டன் சவுண்ட் எஃபெக்ட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ., வைபை 802.11 ac, ப்ளூடூத் 4.2 LE, GPS, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.