ஹூவாய் நிறுவனம் உலக அளவில் மேட் எக்ஸ்.எஸ். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
1. ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 1,95,425
இந்த ஹூவாட் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 2480×1148 பிக்சல் 19.5:9 OLED டிஸ்ப்ளேவினை மடிக்கப்பட்ட நிலையிலும், 6.38 இன்ச் 2480×892 பிக்சல் OLED 25:9 பின்புறம் பேக் பேனல் டிஸ்ப்ளேவினை பின்புறத்திலும் கொண்டுள்ளது.
மேலும் இது 8.0 இன்ச் 2480×2200 பிக்சல் OLED 8:7.1 டிஸ்ப்ளேவினை திறக்கப்பட்ட நிலையிலும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் கிரின் 990 5ஜி பிராசஸர் வசதி கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ARM மாலி-G76MP16 GPU, டூயல் பி்க் கோர் + டைனி கோர் NPU வசதி கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. LPDDR4x ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி வசதி கொண்டதாக உள்ளது.
இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0.1, HMS இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 40 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், ஹூவாய் TOF கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், 5ஜி மல்டி-மோட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5 LE, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை இது 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.