ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மிஸ்டிக் சில்வர், வெள்ளை, கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் வெளியாகியுள்ளது.
ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் இது டிசிஐ-பி3, எச்டிஆர், 90Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Kirin 9000 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் வட்ட வடிவினைக் கேமரா கொண்டுள்ளது. ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 50எம்பி பிரைமரி லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டதாகவும் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், என்எப்சி, நாவிக், புளூடூத் 5.2, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் 4200எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் 40 வாட் சூப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.