Mobile

ஹூவாய் மேட் 30 ப்ரோ: சினி லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு!

ஹூவாய் நிறுவனம் தனது அடுத்த முதன்மை ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது போல் தெரிகிறது. Huawei Mate 30 தொடரின் கீழ் வெளியாகவுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களுமே கடந்த ஆண்டு வெளியான Huawei Mate 20-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக இருக்கும். 


 ஒரு லீக்ஸ்டர் வழியாக வெளியான தகவலின் படி, ஹூவாய் மேட் 30 ப்ரோ அதன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது இரண்டு 40MP கேமராக்களும், ஒரு 8MP கேமராவையும் கொண்டிருக்கும். 

ஹவாய் மேட் 30 ப்ரோ: சினி லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு!

முதல் 40MP கேமரா ஆனது 1/1.5” Sensor size மற்றும் f/1.4 aperture-ஐ அளவிலான சென்சாரை கொண்டிருக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஹூவாய் பி 30 ப்ரோவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட RYYB Pixel Layout அம்சத்தையும் இது கொண்டிருக்கும். மற்றும் இந்த கேமரா பல்வேறு Cine Lens அம்சங்களாலும் ஆதரிக்கப்படும். 


இரண்டாவது 40MP கேமராவானது 120 டிகிரி வரையிலான Field-of-view மற்றும் 1/1.7” அளவிலான சென்சாராக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது 8MP கேமராவானது 5X zoom வரையிலான ஆதரவை கொண்ட Telephoto lens ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இது ஹுவாய் பி 30 ப்ரோவில் காணப்பட்ட ஒரு அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹூவாய் மேட் 30 தொடரின்கீழ் Huawei Mate 30 Pro உடன் ஒரு நிலையான Huawei Mate 30 ஸ்மார்ட்போனும், ஒரு 5G வேரியண்ட் ஸ்மார்ட்போன் ஒன்றும் அறிமுகமாகலாம். வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ள Huawei Mate 30 Pro-வின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் ஆனது ரூ.. 84,990/- ஆகும். 

Related posts

மலிவு விலையில் மலேசியாவில் அறிமுகமானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

TechNews Tamil

ரூ.2000 வரை விலைகுறைப்பு செய்யப்பட்ட iQOO 3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil