மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது இரண்டு வகையான புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். மேலும் இது CDL-AN50 என்ற மாடல் எண் கொண்டதாகவும், மேலும் இது இதற்கு முந்தைய மாடலான ஹின்ஜ் டிசைன், மேம்பட்ட ஹார்டுவேர் போன்றவற்றினைவிட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 8.3 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், இது 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை கிரின் 9000 சிப்செட் வசதி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி வசதி, Hi1105, வைபை 6, ப்ளூடூத் 5.1 கொண்டுள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் சார்ந்த EMUI 11 இயங்குதளம் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.
மேலும் இது OLED பேனல் வசதியினைக் கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை அதிக அளவிலான ரெசல்யூஷன் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3900 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.