இந்தியாவில் ஹூவாமி நிறுவனம் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில் இந்த ஹூவாமி ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச்சின் முன்பதிவு துவங்கியுள்ளது.
அமேஸ்பிட் மற்றும் ப்ளிப்கார்ட் இரண்டிலும் இந்த முன் பதிவானது துவக்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மற்றும் அலுமினியம் அலாய் கேஸ் மற்றும் சிலிகான் ஸ்டிராப் போன்ற வகைகளில் வெளியாகின்றது.
அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளேவினையும், மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சப்போர்ட் கொண்டதாக உள்ளது.

மேலும் கூடுதல் அம்சமாக 12 ஸ்போர்ட் மோட்கள் கொண்டதாகவும், மேலும் ஆக்டிவிட்டி டிராக்கிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பயோ டிராக்கர், 2 பிபிஜி டேட்டா சென்சார் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 மீட்டர்கள்) வசதியினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி மெமரி கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 471 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.