ஹூவாய் நிறுவனம், தற்போது 65 இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவிக்கு எக்ஸ்65 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
1. ஹூவாய் எக்ஸ்65 மாடலின் விலை – (இந்திய மதிப்பில்) ரூ.2,68,980
இந்த ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்ய்ப்படும் என்று கூறப்ப்டுகிறது.
எக்ஸ்65 ஸ்மார்ட் டிவி ஆனது 65 இன்ச் 4கே எச்டிஆர் ஒஎல்இடி டிஸ்பிளேவினையும், 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
இந்த எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடல் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 950 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

ஹூவாய் எக்ஸ்65 ஸ்மார்ட் டிவி ஆனது குவாட்-கோர் 28nm Honghu 898 பிராசஸர் வசதியையும், இது மாலி-ஜி51எம்பி4 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை ஸ்மார்ட் டிவியானது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 24எம்பி அல்ட்ரா வைடு பாப்-அப் கேமரா வசதி கொண்டுள்ளது, இந்த டிவியின் மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
இது 75w 14-ஸ்பீக்கர் அண்டர்-டிஸ்ப்ளே சவுண்ட் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இணைப்பு ஆதரவாக வைஃபை 802.11,புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.