சீனாவில் ஹூவாய் நிறுவனம் அதன் ஹானர் வாட்ச் இஎஸ் மாடலை பயனர்களின் மத்தியில் வரவேற்பினைப் பெறும் வகையில் வெளியிட்டுள்ளது. இந்த ஹானர் வாட்ச் இஎஸ் மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் வாட்ச் இஎஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.64 இன்ச் ஹெச்டி அளவில் 456×280 பிக்சல் ஹெச்டி 2.5டி AMOLED டிஸ்ப்ளே பிரத்யேக செவ்வக வடிவம் கொண்ட AMOLED தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் கொண்டுள்ளது.
மேலும் இது ஆட்டோ பிரைட்னஸ் மற்றும் ஆறு விதமான ஆல்வேஸ் ஆன் வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5 கொண்டுள்ளது, மேலும் இது 6 ஆக்சிஸ் ஐஎம்யு சென்சாரினைப் பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.
இது ஹூவாய் ட்ரூசீன் 4.0, ஹூவாய் ட்ரூஸ்லீப் 2.0 கொண்டதாகவும், மேலும் 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது.
ஹானர் வாட்ச் இஎஸ் மாடல் மெட்டோரைட் பிளாக் நிறத்தில் வெளியாகியுள்ளது.