Mobile

சீனாவில் அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன்!!

ஹூவாய் நிறுவனம் சீனாவில் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸமார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800 பிராசஸர் வசதியுடன் 7என்எம் சிப் வசதியினையும், கார்டெக்ஸ்-ஏ76 ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 உடன் EMIUI 10.1 ஆதரவினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் 5 ஜி (எஸ்ஏ/ என்எஸ்ஏ) / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி-வகை சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் களமிறங்க உள்ள மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்.. கசிந்த விவரங்கள் இதோ!!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் வெளியாகிய டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil