Mobile

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. மேலும் இது மேஜிக் நைட் பிளாக், Qijing ஃபாரஸ்ட் மற்றும் Dawn கோல்ட் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் கிரிண் 710ஏ ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி51 எம்பி4 ஜிபியு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!!

மேலும் ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 (EMUI 10.1) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5இ 5ஜி (SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

நம்பர் 1 இடத்தினை எட்டிப்பிடிக்க ஜியோவின் அதிரடி சலுகைகள்!

TechNews Tamil

15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் சிறப்பான அம்சங்களுடன் வெளியான ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil