ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் பி40 ப்ளஸ் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை- இந்திய விலை ரூ. 82,125
இந்த ஹூவாய் பி40 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ச் HD+ பிளெக்ஸ் 2640×1200 பிக்சல் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மேலும் இது ARM மாலி-G76MP16 GPU வசதியினைக் கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. ரேம், 256 / 512 ஜி.பி. மெமரி. மெமரி வசதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, 8 எம்.பி. பெரிஸ்கோப் கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், ToF கேமரா போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது.
முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.
மேலும் இது யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை Wi-Fi 802.11 ax, ப்ளூடூத் 5.1 LE, ஜி.பி.எஸ்.,, யு.எஸ்.பி. 3.1 டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.