Mobile

அசரவைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹுவாய் பி40 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஹுவாய் நிறுவனம் போலந்தில் ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 720X1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரி வசதியினைப் பொறுத்தவரை இந்த ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் 4ஜபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹுவாய் பி40 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி செல்பீ கேமராவினை முன்புறத்தில் கொண்டுள்ளது.

இது ஹைசிலிகான் கிரிண் 710எப் சிப்செட் வசதி கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

 ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் புளூடூத் 5, ஜி.பி.எஸ், ஏ.ஜி.பி.எஸ், குளோனாஸ், மைக்ரோ யு.எஸ்.பி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

Related posts

நவம்பர் 29 முதல் Cosmic Purple நிறத்தில் Redmi Note 8 !

TechNews Tamil

ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ!!

TechNews Tamil

5G அம்சத்துடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil