ஹுவாய் நிறுவனம் தற்போது ஹுவாய் பி40 லைட் இ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் இது 720X1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது, ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 990 SoC ப்ராசஸர் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை ரேம், 50 எம்பி சோனி சென்சார், 16 எம்பி, 8 எம்பி அல்ட்ரா விஷன் என மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் செல்பி கேமராவாக 32 மெகாபிக்சல் கொண்டு உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இது 3,800 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.