ஜனவரி மாதம் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட வெர்சன் ஐரோப்பாவில் அறிமுகமாகவுள்ளதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஹுவாய் பி30 லைட் சாதனத்தில் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் இதன் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.15 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 24எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, யுஎஸ்பி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் கிரிண் 710 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, பாதுகாப்பு வசதிக்காக இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.
மேலும் இது 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.