Mobile

அறிமுகமாகவுள்ள ஹெச்டிசியின் டிசையர் 19+ ஸ்மார்ட்போன்

ஹெச்டிசி நிறுவனம் சிறப்பான ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது.

பின்னடைவினை அவ்வப்போது சந்தித்தாலும் தன் நிலையினை நிலைநிறுத்த ஹெச்டிசி வேண்டுவன செய்து வந்தது.

தற்போது அந்த வகையில் டிசையர் 19+ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹெச்டிசி.

அறிமுகமாகவுள்ள ஹெச்டிசியின் டிசையர் 19+ ஸ்மார்ட்போன்

இந்த மாடல் தைவானில் மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றதை அடுத்து, இந்தப் போன் ஹெச்டிசி நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில்  அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

6.2 இன்ச்சில் ஹெச்.டி டிஸ்பிளே, 720×1520 பிக்ஸலில் ரெசல்யூசன், 13 எம்பியில் பிரைமரி  சென்சாருடன் கூடிய மெயின் கேமரா, 8 எம்பியில் செகண்டரி சென்சாருடன் வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 5 எம்பியில் டெரிட்டரி,  டெப்த்-சென்சிங்  சென்சாருடன் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், 16 எம்பியில் செல்ஃபி கேமரா போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.

3,850 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம், ஃபிங்கர் பிரின்ட் லாக்-இன் வசதி, மீடியா டெக்  ஹெலியோ பி35 பிராசஸர் என சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

Related posts

ஆரம்பமானது ரியல்மி 3i இன் விற்பனை!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் Realme X2 Pro!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளே!!

TechNews Tamil