Wildfire X ஆனது இந்தியாவில் ரூ.9,999/- என்கிற புள்ளியில் தொடங்குகிறது. அதாவது இரண்டு
ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வாங்க கிடைக்கும். இதன் 3 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.9,999/-க்கும், மறுகையில்
உள்ள 4 ஜிபி ரேம்
வேரியண்ட் ஆனது ரூ.12,999/-க்கும் வாங்க கிடைக்கிறது.
Sapphire blue எனும் ஒற்றை வண்ண மாறுபாட்டின் கீழ் வெளியாகும் Wildfire X
ஸ்மார்ட்போன் ஆனது பிரபல
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

Wildfire X ஸ்மார்ட்போன் ஆனது, எச்டிசி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் பிரிவை கூகுளிடம் விற்றபின் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது 88.8% அளவிலான Screen-to-body விகிதம் கொண்ட 6.22 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
மேலும் இது 2.0GHz உடனான ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மற்றும் 4ஜிபி + 128 ஜிபி என்கிற இரண்டு மெமரி வேரியண்ட்டின் கீழ் வெளியாகியுள்ளது. இது Hybrid memory slot வழியாக மெமரி நீட்டிப்பிற்கான ஆதரவை வழங்குகிறது.