எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் இன்று துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.22-இன்ச் HD+ திரை, 3 பின்புற கேமராக்கள், 3,300mAh பேட்டரி, ஆண்ட்ராய்ட் 9 பை ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன், இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அவற்றில் 3GB RAM + 32GB சேமிப்பு வகையின் விலை 9,999 ரூபாய், மற்றும் 4GB RAM + 128GB சேமிப்பு வகையின் விலை 12,999 ரூபாய். இந்த விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன் 3D OPVD கண்ணாடி திரை மற்றும் பின்புறத்தில் ஹைப்பர் ஆப்டிகல் வடிவமைப்புகளை கொண்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.22-இன்ச் HD+ திரை (720×1520 பிக்சல்கள்), HD+ IPS திரை, வாட்டர்-ட்ராப் நாட்ச், 88.8 சதவிகித திரை-உடல் விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது.
3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவில் டெப்த் சென்சார் கேமரா.
இந்த பின்புற கேமரா 8Xஹைபிரிட் ஜூம் வசதியையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன், செல்பிக்களுக்கு 8 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன். 3,300mAh பேட்டரி அளவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 10W சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.