Mobile

அறிமுகமானது எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன்!!

எச்டிசி நிறுவனம் தற்போது எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை இப்போது பார்க்கலாம்.

எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி23 சிப்செட் வசதி கொண்டுள்ளது, இது மாலி ஜி71 ஜிபியு ஆதரவினைக் கொண்டு உள்ளது. இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

அறிமுகமானது எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் என்எப்ச்,புளூடூத் 4.2, போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை விடுத்த க்வால்காம் !

TechNews Tamil

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Realme XT ஸ்மார்ட்போன் பெற்றுள்ள அந்த புதிய அப்டேட் இதுதான்!

TechNews Tamil