Mobile

ரஷ்யாவில் வெளியாகவுள்ள எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான எச்டிசி நிறுவனம் தற்போது எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் வெளியிட்டுள்ளது. இந்த வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன்  720 x 1560 பிக்சல் தீர்மானம், 6.51 இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ பி22 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. மெமரி அளவாக 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டதாகவும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

ரஷ்யாவில் வெளியாகவுள்ள எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன்!

கேமரா எனக் கொண்டால் எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவாக 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, யூ.எஸ்.பி-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா விரைவில் வெளியீடு

TechNews Tamil