HTC டிசையர் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மீண்டும் அறிமுகமாகியுள்ளது. இந்த எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மிராஜ் ஊதா மற்றும் ஸ்டார் ஷிப் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் கொண்டதாகவும், ஸ்னாப்டிராகன் 690 5ஜி எஸ்ஏசி செயலி மூலம் இயங்குவதாகவும் உள்ளது.
மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைஃபை, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.