Mobile

தைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்!

எச்.டி.சி நிறுவனம் தைவானில் HTC டிசையர் 20 பிளஸ் ஸ்மார்ட்போனை  வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

புதிய HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன் டான் ஆரஞ்சு மற்றும் ட்விலைட் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளடக்க சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

தைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்!

மேலும் இது மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக மெமரி அளவினை விரிவாக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ராவைடு லென்ஸ், 115 டிகிரி ஃபீல்ட்-வியூ, 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் கேமரா கொண்டுள்ளது. மேலும் HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5,000 எம்ஏஎச் கொண்ட பெரிய பேட்டரி கொண்டதாகவும் மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்.டி.இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள Realme XT!

TechNews Tamil

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil