ஹெச்பி நிறுவனம் தற்போது எலைட் டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடல் பிஸினஸ் நோக்கத்திற்காக அறிமுகம் செய்யப்படுவதாக ஹெச்பி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது, இது வணிக ரீதியாக பெரிய வரவேற்பினைப் பெறும் என்றும் அறிமுக விழாவில் கூறியுள்ளனர்.
இந்த லேப்டாப் 13-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது விப்ரோ இன்டெல் சிபியு வசதியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.
ஷட்டர் திறன் கொண்ட வெப்கேமிற்கு ஆதரவாக ஐஆர் கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. 16ஜிபி ரேம் ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் மாடல் 16ஜிபி ரேம் மற்றும் 2டிபி உள்டக்க மெமரி ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
எப்எச்டி 400-nit பேனல் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது சிங்கிள் சார்ஜரில் 16.5மணிநேரம் வரை பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
இதன் விலையானது ரூ.1,13,964 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, மேலும் இந்தியாவில் இதன் விலையானது மாறபடக் கூடும் என்று தெரிகிறது.