அதாவது டெஸ்க்டாப்பில் வாட்ஸ் ஆப்பினைப் பயன்படுத்த நினைப்போர் டெஸ்க்டாப் ரீதியான எந்த ஒரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.
அதற்கு மாற்றாக, வெப் பிரெளசர் மூலம் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம். அதாவது இப்போது நாம் கணினியிலிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புகளைச் செய்வது மற்றும் பதிலளிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1. கம்ப்யூட்டரில் உள்ள வெப் பிரெளசரில் web.whatsapp.com என்று டைப் செய்யவும்
2. அடுத்து QR குறியீடு ஸ்கேனர் திரையில் தோன்றும்

3. அடுத்து, மொபைல் போனில் வாட்ஸ்ஆப்பைத் ஓப்பன் செய்து கம்ப்யூட்டரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
4. இப்போது வாட்ஸ்அப்பின் முழு விவரங்களும் வெப் பிரெளசரில் காண்பிக்கப்படும்.
5. இப்போது, நாம் மெசேஜ்களையோ அல்லது வாய்ஸ்கால் மற்றும் வீடியோ கால் என அனைத்தையும் செய்ய முடியும்.