How to

நோக்கியா பியூச்சர் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?


வாட்ஸ் ஆப் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் வாட்ஸ் ஆப் செயலியை வெளியிட்டது. ஜியோ போன் மற்றும் நோக்கியா 8110 பியூச்சர் போன்களுக்காக Kai OS தளத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம், வாட்ஸ் ஆப் செயலியை வெளியிட்டுள்ளது. 


Kai OS பயனர்கள் அனைவரும் பியூச்சர் போனில் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்த முடியும். ஜியோ போன் மற்றும் நோக்கிய 8110 போன்களில் மெசேஜ் செயலிகளுக்காக 256 எம்.பி அல்லது 512 எம்.பி சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோக்கியா பியூச்சர் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?


ஜியோ போனில் பயனர்கள் வாட்ஸ் ஆப் மட்டுமில்லாமல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்படுத்த முடியும். 


நோக்கிய பியூச்சர் போன்களில் எப்படி வாட்ஸ் ஆப் செயலியை இன்ஸ்டால் செய்வதென்று பார்ப்போம். உங்கள் ஜியோ போனில் வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்ய இந்த செயல்முறைகளை பின்பற்றுங்கள். 


***உங்கள் போனில் உள்ள ஜியோ ஸ்டோர் ஆப் அல்லது ஸ்டோர் ஆப் கிளிக் செய்யுங்கள்.

***இப்பொழுது கீழ் நோக்கி ஸ்குரோல் டவுன் செய்து ‘சோசியல்’ (Social) கிளிக் செய்யுங்கள்.

 ***திரையில் உள்ள வாட்ஸ் ஆப் லோகோவை கிளிக் செய்யுங்கள்.

 ***உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதற்கான அனுமதியை வழங்குங்கள்.

 ***இறுதியாக ஓகே கிளிக் செய்து இன்ஸ்டால் கிளாசிக் செய்யுங்கள்.

 ***வாட்ஸ் ஆப் டவுன்லோட் ஆனதும் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து வாட்ஸ் ஆப் சேவையை உங்கள் பியூச்சர் போனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 


Related posts

லேப்டாப் சூடாவதைத் தடுப்பது எப்படி?

TechNews Tamil

கேஸ் இணைப்பினை ஆன்லைனில் Booking செய்வது எப்படி?

TechNews Tamil

ஸ்மார்ட்போன் Hang ஆவதை சரி செய்வது எப்படி?

TechNews Tamil