ஜியோ போனில் வாட்ஸ் ஆப்பா ? என் ஷாக் ஆக வேண்டாம், ஜியோ போனில் ஆண்ட்ராய்டில் உள்ள அதிக அளவிலான சேவைகள் கிடைக்கப் பெறுகிறது. எனவே வாட்ஸ் ஆப்பிற்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தேவையில்லை, இது அறிமுகமாகி ஏறக்குறைய 1 ஆண்டுகள் முடிவடைந்தாலும், தற்போதுதான் இது பிரபலமாகியுள்ளது.
முதலில் ஜியோ ஸ்டோருக்கு சென்று வாட்ஸ் ஆப் -ஐ டவுன்லோட் செய்யவும்.
வாட்ஸ் ஆப் டவுன்லோட் ஆனதும், எப்போதுபோல வாட்ஸ் ஆப் அக்கவுண்டை பதிவு செய்ய வேண்டும்.

உங்களது புரோபைல் பெயர் மற்றும் செல்போன் நம்பர்
மற்றும் இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு உங்கள் நம்பருக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்தால் உங்கள்
வாட்ஸ் ஆப் கணக்கு செயல்பட ஆரம்பித்து விடும்.
ஆன்டிராய்டு போனில் உள்ள பெரும்பாலான விருப்பங்கள் இந்த ஜியோ வாட்ஸ் ஆப்பிலும்
உள்ளது.