டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை தற்போது ஆஃப்லைனிலும் கிடைக்கிறது. இதனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே குறிப்பிட்ட இடத்தினுடைய மேப்ஸ் டேட்டாவை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
அதோடு அந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள், நேவிகேஷன் டைரக்ஷன்கள் போன்றவையும் டவுன்லோட் ஆகிவிடும். பின்னர் ஆஃப்லைனில் மேப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு கிளம்பும்போது, மொபைலில் இணையதள வசதி இல்லையெனில், நாம் செல்ல வேண்டிய இடத்தை search பாரில் தேடி ‘டவுன்லோட்’டை க்ளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
அதன்பின்னர் மேப்ஸ் மெனுவில் Offline Areasவில் உள்ள ’+’ பட்டனை க்ளிக் செய்தும் டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
ஆன்லைனில் இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் லைவ் ட்ராபிக் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மொபைல், வைஃபையோடு இணைக்கப்பட்டிருக்கும்போது தானாகவே மேப்ஸ் அப்டேட் செய்து கொள்ளும்.
இதனால் இனி கவலையே வேண்டாம், இணைய வசதி இல்லையென்று தெரியாத ஊரில் பயப்படத் தேவையில்லை.