வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த அம்சமானது தற்போது பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதியை இப்போது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

வழிமுறைகள்:
- ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யவும்.
- அடுத்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளத்தினை ஓப்பன் செய்து, கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
- கணினியில் வாட்ஸ்அப் ஓப்பன் ஆனதும், ரைட் க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் இன்ஸ்பெக்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து மேல்புறத்தில் body class=web என்னும் குறியீட்டில் உள்ள web ஐ டெலிட் செய்து விடவும்.
- அதற்கு மாற்றாக அடுத்து web dark என டைப் செய்யவும்.
- அடுத்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்போது, வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோடினைப் பயன்படுத்த முடியும்.