விவா வீடியோ செயலி:
வழிமுறை 1: ஸ்மார்ட்போனில் விவா வீடியோ செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
வழிமுறை 2: செயலியை திறந்து எடிட் வீடியோ ஆப்ஷனில் நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொள்ளவும்.

வழிமுறை 3: இனி நெக்ஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 4: ட்ரிம் வீடியோ திரைக்கு சென்று ஸ்லைடர் மூலம் தேவையான பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை 5: இவ்வாறு நீங்கள் விரும்பும் பகுதிகளை தேர்வு செய்து கூடுதலாக சேர்த்துக் கொள்ள ஆட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். பல்வேறு க்ளிப்களை பயன்படுத்த நினைக்கும் போது நீங்கள் தேர்வு செய்த பகுதிகளில் சிசர் ஐகானை பயன்படுத்தலாம்.
வழிமுறை 6: போதுமான அளவு சேர்ந்ததும் வீடியோ எடிட் செய்ய தொடரலாம், மேலும் சிள க்ளிப்களை சேர்க்கலாம்.
வழிமுறை 7: இனி நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்ததும் எடிட்டிங் ஸ்கிரீன் திறக்கும்.
வழிமுறை 8: இங்கு வீடியோவில் பின்னணி இசை, ஃபில்ட்டர்கள் போன்றவற்றை சேர்க்க முடியும்.
வழிமுறை 9: இறுதியில் சேவ் அல்லது அப்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 10: வீடியோவை எக்ஸ்போர்ட் செய்ய விரும்பினால், எக்ஸ்போர்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.
வழிமுறை 11: இனி Normal 480P ஆப்ஷனை க்ளிக் செய்ய
வேண்டும்.