வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதாவது வாட்ஸ் ஆப் நிறுவனம் யூபிஐ சார்ந்து இயங்கும் பணப்பரிமாற்ற சேவையை வழங்க உள்ளது. இந்த வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்புவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க

1. Chat Screen-இல் நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் Chat ஐ ஓப்பன் செய்யவும்.
2. அடுத்து இணைப்பு என்ற குறியீட்டை அழுத்தி payments என்பதை தேர்வுசெய்யவும்.
3. அடுத்து நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை enter செய்து Next என்பதைக் க்ளிக் செய்யவும்.
4. அடுத்து யூபிஐ கடவுச்சொல்லை உள்ளிடவும்.
5. பணம் இப்போது அனுப்பப்பட்டுவிடும்.