கூகுள் க்ரோம் பயன்படுத்தி ஸ்கேன் செய்யும் முறை:
1.லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் முதலில் கூகுள் க்ரோம் ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
2.க்ரோம் வலதுபுறத்தின் மேல் பகுதியில் மூன்று புள்ளிகள் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்
3. இப்போது அதில் Settings’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
4.‘Settings’ பகுதி முதற்பகுதி மட்டும் தான் இப்போது திரையில் காட்டும். அடியில் சென்றால் ‘Advance’ இருக்கும். அதை கிளிக் செய்தால், மேலும் சில செட்டிங்ஸ்கள் காட்டப்படும்

5.பின்பு ‘Rest and Clean up’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, ‘Clean up computer’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
6.சுலபமாக வழியாக chrome://settings/cleanup என்ற லிங்கில் கூட செல்லலாம்.
7.இப்போது Clean Up Computer என்ற பகுதியில் Find என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
8.இவ்வாறு செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற சாப்டவேர்கள், ஆபத்தான சாப்ட்வேர்கள் குறித்த விபரங்களை கூகுள் குரோம் நமக்கு காட்டும்.
9.இதைப் பயன்படுத்தி நமது லேப்டாப், கம்ப்யூட்டரின் இணைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.