How to

கூகுள் க்ரோம் மூலமாக ஸ்கேன் செய்வது எப்படி?

நாம் டவுன்லோடு செய்யும் பாடல்கள், படங்கள், சாப்ட்வேர்கள் மூலமாக நமக்கே தெரியாமல் நமது லேப்டாப் ஹேக் செய்யப்படுகிறது. இதிலிருந்துபாதுகாத்துக் கொள்ள AntiVirus சாப்டவேர் இன்ஸ்டால் செய்து கொள்வது அவசியம்.

சில நேரங்களில் Anti Virus இருந்தாலும், அதை அப்டேட் செய்யாமல் இருந்தாலும், இது போன்ற பிரச்னைகள் எழக்கூடும். 


அந்த வகையில், கூகுள் குரோம் இது போன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து லேப்டாப்பை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வசதி வழங்குகிறது.

கூகுள் க்ரோம் மூலமாக ஸ்கேன் செய்வது எப்படி?

இதன் மூலம் நமது கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மற்றும் ஆபத்தான சாப்ட்வேர்களை கண்டறிய முடியும். மேலும், இணையம் மூலமாக நமது பணத்தை திருடும் சம்பவங்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

கூகுள் க்ரோம் மூலமாக ஸ்கேன் செய்யும் முறை: 
1.லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் முதலில் கூகுள் க்ரோம் ஓபன் செய்து கொள்ள வேண்டும். 
2.க்ரோம் வலதுபுறத்தின் மேல் பகுதியில் மூன்று புள்ளிகள் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும் 
3. இப்போது அதில் Settings’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் 
4.‘Settings’ பகுதி முதற்பகுதி மட்டும் தான் இப்போது திரையில் காட்டும். அடியில் சென்றால் ‘Advance’ இருக்கும். அதை கிளிக் செய்தால், மேலும் சில செட்டிங்ஸ்கள் காட்டப்படும் 

5.பின்பு ‘Rest and Clean up’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, ‘Clean up computer’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
6.சுலபமாக வழியா chrome://settings/cleanup என்ற லிங்கில் கூட செல்லலாம். 
7.இப்போது Clean Up Computer என்ற பகுதியில் Find என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

8.இவ்வாறு செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற சாப்ட்வேர்கள், ஆபத்தான சாப்ட்வேர்கள் குறித்த விபரங்களை கூகுள் குரோம் நமக்கு காட்டும். 
9.இதைப் பயன்படுத்தி நமது லேப்டாப், கம்ப்யூட்டரின் இணைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும். 

Related posts

வீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

TechNews Tamil

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?

TechNews Tamil

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

TechNews Tamil