How to

ரேஷன் கார்டில் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது எப்படி?

குடும்ப அட்டையில் மொபைல் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைத்தால் மட்டுமே அவர்கள் வாங்கும் பொருட்கள் பற்றிய எஸ்.எம்.எஸ் வசதியை பெற முடியும்.

ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை எப்படி பதிவு செய்வது?

மொபைல் எண்ணை பதிவு செய்ய 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.

ரேஷன் கார்டில் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது எப்படி?

அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எடுத்துக்காட்டாக 005/sh/ 335433342 என்ற எண்ணை கூறவும்.

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த சில மணித் துளிகளில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..

Related posts

இன்பாக்ஸில் உங்களுக்குத் தேவையில்லாத மெயில்களை தடுப்பது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ்அப் பே- ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ்-அப்பில் வதந்திகளை கண்டுபிடிப்பது எப்படி?

TechNews Tamil