How to

போனில் வாட்ஸ்ஆப் மெசெஜை ரெகவர் செய்வது எப்படி?

வாட்ஸ் மெசெஜை மெமரியை கருத்தில் கொண்டு அவ்வப்போது நாம் டெலிட் செய்து விடுகிறோம். ஆனால் திடீரென அந்த மெசெஜ் தேவைப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். இப்போது போனில் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

போனில் வாட்ஸ்ஆப் மெசெஜை ரெகவர் செய்வது எப்படி?

1. File Manager > WhatsApp > Database, இதை பின்பற்றி உள்ளே செல்லுங்கள்.


2. அங்கு ‘msgstore.db.crypt12‘ என்ற ஒரு டாக்குமென்ட் இடம் பெற்றிருக்கும். அதை தேர்வு செய்து ‘msgstore_BACKUP.db.crypt12‘ என பெயர் மாற்றுங்கள்.


3. பின் ‘msgstore-YYYY-MM-DD.1.db.crypt12‘ இம்மாதிரி பல டாக்குமென்ட்கள் அங்கு இடம் பெற்றிருக்கும். அதில் மிக சமீபத்திய டாக்குமென்ட் எது என்பதை பார்த்து, அதை ‘msgstore.db.crypt12‘ என பெயர் மாற்றுங்கள்.


4. பின் உங்கள் கூகுள் ட்ரைவை ஓபன் செய்து அங்குள்ள பேக்-அப் (Backups) என்ற வசதியை தேர்வு செய்யுங்கள். அதில் உள்ள வாட்ஸ்ஆப் பேக்-அப் டாக்குமென்ட்டை அழித்துவிடுங்கள். இது லோக்கல் பேக்-அப்பிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுக்க உதவும்.


5. பின் உங்கள் வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.


6. தற்போது அங்கு காணப்படும் ‘Restore‘ பட்டனை அழுத்தி, அழிந்துபோன உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளுங்கள்

Related posts

ஆன்ட்டி வைரஸ் சொல்வது உண்மையா எனக் கண்டறிவது எப்படி?

TechNews Tamil

ரேஷன் கார்டில் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது எப்படி?

TechNews Tamil

ATM மெஷின் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வது எப்படி ?

TechNews Tamil