1. கூகுள் லாக் பக்கத்தில் உள்ள ‘Forgot password?’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
2. இறுதியாக நினைவில் வைத்திருக்கும் பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும். எந்த பாஸ்வேர்டும் நினைவில் இல்லாத பட்சத்தில் ‘Try another way’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. கூகுள் வெரிஃபிகேஷன் நோட்டிஃபிகேஷனை, கூகுள் அக்கவுன்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பலாமா என கேட்க்கும்.

4. மொபைல் நம்பர் இருந்தால் அந்த ஆப்சனை கிளிக் செய்யவும்.
5. இல்லையெனில் மாற்றுவழியாக Try another way ஆப்ஷனை கிளிக் செய்யவும், கூகுள் வெரிஃபிகேஷன் கோடினை மாற்று மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்.
6. அதுவும் இல்லையெனில், Try another way ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்யவும்.
7. கூகுள் தற்போது இறுதியாக ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கேட்கும். கொடுக்கப்படும் மின்னஞ்சலுக்கு வெரிஃபிகேஷன் கோடு அனுப்பும்.
8. இதன்மூலம் ஜிமெயில் அக்கவுன்ட்டை இனி பயன்படுத்தலாம்.