How to

ஹேக்கர்களிடமிருந்து போனை பாதுகாப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் சந்தேகம் கொண்டால் உடனடியாக நீங்கள் டவுன்லோடு செய்யாத செயலிகளை டெலிட் செய்துவிடுங்கள். அதேபோல் ரிஸ்கான மெசேஜ்களை டெலிட் செய்வது, மொபைல் பாதுகாப்பு சாப்ட்வேர்கலை பயன்படுத்துவது ஆகியவைகளை உடனடியாக செய்யுங்கள்.

அதேபோல் உங்களுடைய காண்டாக்ட் எண்களை உடையவர்களுக்கும் இதுகுறித்து எச்சரிக்கை செய்துவிடுவதும் நல்லது. இதற்கு மேலும் ஹேக்கிங் தொந்தரவு இருந்தாலும் ஸ்மார்ட்போனை ரிஸ்டோர் செய்துவிடுவது நல்லது. ரீஸ்டோர் செய்யும் முன் சில விஷயங்களை ஆன்லைன் சென்று தெரிந்து கொள்ளவும்

ஹேக்கர்களிடமிருந்து போனை பாதுகாப்பது எப்படி?

மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேர் என்பது உங்கள் மொபைலை ஹேக் செய்வதை தடுப்பது மட்டுமின்றி உங்களுடைய பர்சனல் விஷயங்கள் திருடு போகாமல் இருப்பதையும் தடுக்கின்றது.

ஸ்மார்ட்போனை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்து கொள்ள வேண்டியது போனை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, திருடர்களிடம் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம். பாஸ்வேர்ட், அல்லது ஃபேசியல் ஐடி பயன்படுத்தி ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத நேரத்தில் லாக் செய்து வைத்து விடுங்கள். மேலும் பாஸ்வேர்டை மனதில் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் மற்றும் வங்கி பாஸ்வேர்டுகளை ரிமம்பர் பாஸ்வேர்ட் ஆப்சனை தேர்வு செய்ய வேண்டாம். இது ஹேக்கர்களுக்கு ரொம்ப வசதியாக போய்விடும். ஒருசில முக்கிய பாஸ்வேர்டுகளையாவது ஞாபகம் வைத்து கொள்வது மிகவும் முக்கியம்.

பொது வெளியில் கிடைக்கும் அதாவது ஓட்டல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் கிடைக்கும் இலவச டேட்டாக்களை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள். இதனை பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் உள்ளே புகுந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் பொது இடத்தில் சார்ஜ் செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்

பொது இடத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் எதிரிலேயே வைத்து கொள்ளவும். ஸ்மார்ட்போனை தனியாக வைத்து விட்டு வெளியே செல்ல வேண்டாம். திருடர்கள் பயம் மட்டுமின்றி ஹேக்கர்களுக்கு இது வசதியாகிவிடும்

புதிய மொபைல் அச்சுறுத்தல்கள் எல்லா நேரத்திலும் உருவாகின்றன. சமீபத்திய மோசடிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனத்துடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Related posts

வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்புவது எப்படி?

TechNews Tamil

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

TechNews Tamil

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

TechNews Tamil