உங்கள்
பேட்டரியை எப்பொழுதும் முழுவதுமாய் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள்
வாய்ஸ் காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப எந்த தடையும் இல்லாமல் இருக்க முடியும்.
மேலும், எப்போதும் உங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மையான பேட்டரிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். விலை மலிவான போலி பேட்டரியினால் பேர் ஆபத்துகள் நிகழும் எம்பேஜை மறக்கவேண்டாம்.
ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்தல் உங்கள் போன்களை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் போன்களை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான சோப்பு திரவம், சால்வெண்ட் அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை போனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

திரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில், உங்கள் போன் சேதமடையக் கூடும் என்பதனால், உங்கள் போன்களை சில நேரங்களில் உலர வைப்பதும் அவசியம்.
தேவை இல்லாத கீறல்கள், தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்கள் போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான மொபைல் கவர்களை பயணப்படுத்துங்கள். உங்கள் போனை கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். இது உங்கள் போனில் உள்ள மெல்லிய சர்க்கியூட்களை பாதிப்படையச் செய்யும்.