How to

ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அக்கவுண்டை பாதுகாத்து கொள்வது எப்படி?



கூகுள் அக்கவுண்டை ஹேக் செய்யாமல் இருக்க, ஏற்கனவே டூ-ஃபேக்டர் ஆதன்சேஷன் என்ற இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.

 இந்த நிலையில் தற்போது கூகுள் அக்கவுண்டை பாதுகாக மேலும் ஒரு பாதுகாப்பு வசதியை செய்துள்ளது. அதுதான் 2FA என்பதாகும். ஸ்மார்ட்போன்களில் நமது கூகுள் அக்கவுண்டை பாதுகாத்து கொள்ள வடிவமைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் இதனை பயன்படுத்துவது குறித்தும் தற்போது பார்ப்போம். 


கூகுள் அக்கவுண்ட் செக்யூரிட்டியை எனேபிள் செய்வது:

ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அக்கவுண்டை பாதுகாத்து கொள்வது எப்படி?

இதனை செய்ய நீங்கள் முதல் இரண்டு ஸ்டெப்கள் கூகுள் அக்கவுண்ட் வெரிபிகேசனை முதலில் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் செய்து முடித்த பின்னர் நீங்கள் தாராளமாக அடுத்த ஸ்டெப்புக்கு செல்லலாம். ஒருவேளை இந்த இரண்டு ஸ்டெப்புகளை நீங்கள் முடிக்காவிட்டால் கூகுள் வெரிபிகேசன் ஸ்டெப்கள் குறித்து முதலில் தெரிந்து கொள்ளவும்.

மை அக்கவுண்ட் கூகுளுக்கு செல்ல வேண்டும்: இதனை செய்ய முதலில் நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டின் பாஸ்வேர்டுகளை பதிவு செய்து இரண்டு ஸ்டெப் வெரிபிகேசனை செய்து முடிக்க வேண்டும்.

இரண்டாவது ஸ்டெப் : அல்டர்நேட்டிங் ஸ்டெப் பகுதிக்கு சென்று ஸ்குரோல் செய்தால் அதில் தோன்றும் ‘ஆட் செக்யூரிட்டி கீ’ என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆண்ட்ராய்டு டிவைஸில் ரிஜிஸ்டர் செய்த கூகுள் அக்கவுண்டை பதிவு செய்து அதனை ஆட் பட்டன் மற்றும் டன் பட்டனை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும்.

கூகுள் அக்கவுண்ட் லாகின்: அதன் பின்னர் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டிலும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் கூகுள் அக்கவுண்டை லாகின் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் லாகின் செய்ததற்கான நோட்டிபிகேசன் வரும்.

Related posts

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் எப்படி இணைப்பது?

TechNews Tamil

Ad blocker App ஐ பயன்படுத்தி விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

TechNews Tamil

Paypal கணக்கு துவங்குவது எப்படி?

TechNews Tamil