லேப்டாப் சூடாவது என்பது பல காரணங்களால் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இப்போது நாம் கடைகளுக்கு எடுத்து செல்லாமல் வீட்டிலேயே லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1. லேப்டாப்புக்கு அடியில் உள்ள விசிறிகளை சுத்தம் செய்யவும்.
2. மேலும் லேப்டாப் வெப்பமடைவது போல் தெரிந்தால், லேப்டாப்பின் அடிப்புறத்தில் உள்ள Fans துவாரங்களுக்கு அருகில் கையை வைக்கவும்.
3. லேப்டாப்பை ஏற்கனவே உள்ள நிலையில் இருந்து சற்று உயர்த்தியவாறு வைக்கவும்.
4. முடிந்த அளவு வெறும் தரையில், பலகையில் வைப்பதை விட லேப்டாப் டெஸ்க்கினை வாங்கி பயன்படுத்தவும்.
5. இதன்மூலம் விசிறிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
6. மேலும் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை இயக்குவதைத் தவிர்த்தல் வேண்டும்.
7. மேலும் லேப்டாப்பை வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்து பயன்படுத்துதல் கூடாது.