உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள ஃபைலை அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பதுதான் பொதுவான மற்றும் அனைவருக்கும் தெரிந்த நடைமுறையாகும்.
ஆனால் இப்படி அழித்த ஃபைலை வெகு எளிதாக இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software) அழித்த கோப்புகளை எடுக்கமுடியும்.

இதனால் நம்முடைய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.
இது பலருக்கு தெரியாத விஷயமாக இருப்பதால், இது கடினமான செயல்முறை என்று எண்ணுகின்றனர். ஆனால் இது மிக மிக எளிதான செயல்முறையே ஆகும். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு முற்றிலும் அழுந்து விடும்.
1.Eraser
டவுன்லோடு லிங்க்: http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download
2.Kill Disk
டவுன்லோடு லிங்க் : http://www.killdisk.com/