முந்தைய வெர்ஷனில் வாய்ஸ் கமன்ட் மூலம் தனிப்பட்ட மெசேஜ் அனுப்புகின்ற வசதி இருந்தது. இந்த குரூப் மெசேஜ் அப்டேட் உடன் புகைப்படங்கள் மற்றும் ஜிஃப்களை அறிவிப்பு பேனரிலே காணுகின்ற வசதியும் இருக்கிறது.
இந்த சமீபத்திய அப்டேட் உடன், ஐபோனிற்கான வாட்ஸ்ஆப் சிறி மூலம் வாட்ஸ்ஆப் குரூப்களுக்கு மெசேஜ் அனுப்புகின்ற வசதியை அளிக்கிறது. நீங்கள் செயலிக்கு சென்று மெசேஜை தட்டச்சு செய்ய இல்லை.
சிறி பயன்படுத்தி குரூப் மெசேஜ் அனுப்ப “ஹே சிறி” கமேண்ட் கொடுத்தும், ஹோம் பட்டனை பிடித்தபடியே சிறிக்கு சென்று, “சென்ட் எ மெசேஜ் டு வாட்ஸ்ஆப் குரூப் ” என ஆங்கிலத்தில் கேட்டால், சிறி உள்ள குரூப்களின் பட்டியலை காண்பிக்கும்.

பல குரூப்கள் ஒரே பெயரில் இருந்தால் அதில் சரியான குரூப்பை தேர்வு செய்தல் வேண்டும், பின்னர் அனுப்ப வேண்டிய தகவலை கூறி, சம்பந்தப்பட்ட குரூப்பிற்கு அனுப்பச் சொல்ல வேண்டும்.
சிறி மூலம் குரூப் மெசேஜ் அனுப்பும் இந்த வசதியோடு சேர்த்து, ஐபோனிற்கான வாட்ஸ்ஆப் அறிவிப்பு பேனரிலே புகைப்படங்கள் மற்றும் ஜிஃப்கள் காணும் வசதியும் இருக்கிறது என வாட்ஸ்ஆப் பேட்டா தெரிவித்துள்ளது. மேலும் பயனர்கள் ஐபோன்6ல் உள்ள ‘பீக் அண்ட் பாப்’ வசதியை பயன்படுத்தியும், அறிவிப்பு பகுதியை ஸ்வைபி செய்தும் காண முடியும். இந்த அம்சம் ஐஓஎஸ் 10 அல்லது அதற்கும் புதிய வெர்ஷனில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.